மாற்றுத்திறனாளிகளை அவமதித்து பேசிய மகாவிஷ்ணுவை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தினர் கண்டன போராட்டம் நடத்தினர் இடம் : சைதாப்பேட்டை மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.