விநாயகர் சதுர்த்தி வைபவத்தில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் பாதுகாப்புடன் விசர்ஜனம் செய்த பொதுமக்கள்.
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கழிப்பறை கதவு கழன்று 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அப்படியே வைத்துள்ளனர். சரிசெய்ய ஆள் கிடைக்க வில்லையா, இல்லை ஆணி கிடைக்க வில்லையா.
தலைநகர் டில்லியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிரான போராட்டங்கள், அரசு தலைமைப் பதவியில் பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பான கொண்டாட்டங்களால், பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 24ல், அக் ஷர்தம் அருகே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.