தென்காசி மாவட்டம் கடையம் ரயில்வே கேட் அருகே முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் வராததால் சாலையில் உள்ள கேட்வால்வில் கசியும் தண்ணீரை பிடித்து ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்லும் மாணவர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.