துாத்துக்குடி உப்பாற்று ஓடை கரைகள் பலப்படுத்தும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீரராகவ ராவ், கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்
கோவை, தலைமை தபால் அலுவலகம் ரோட்டில் உள்ள ஓய்.எம்.சி.ஏ., வில் 6 முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சம்மர் கேம்ப் தொடங்கியது. இதில் கூடை பந்து விளையாட்டிற்கு பயிற்சிபெற்ற சிறுவர்கள்.