புதுச்சேரி அரும்பார்த்தபுரம் திரு.வி.க அரசு உயர்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் மாணவர் இதழை மாணவிகளுக்கு முன்னாள் ஆசிரியர்கள் சண்முகம், செந்தில்குமரன் ஆகியோர் வழங்கினர். அருகில் பள்ளி தலைமை ஆசிரியர் வாசு.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.