தேனி மாவட்ட நிர்வாகம், சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் ஊழியர் விரோத போக்கினை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியது. இடம் : தேனி கலெக்டர் அலுவலகம்
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.