ஓ.எம்.ஆர் சாலையில் பொதுமக்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள் அதிகம் பயன்படுத்தும் நடை மேம்பாலம் மின் விளக்குகள் இல்லாமல் கும்மிருட்டாக உள்ளது இதனால் அச்சத்துடன் செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்கள்.இடம் : அரசு மேல்நிலைப் பள்ளி அருகில், சோழிங்கநல்லூர்.
ஒடிசா மாநிலம் பரதீப் கடற்கரைப் பகுதியில், இந்தியக் கடலோரக் காவல்படையின் சார்பில் நேற்று பல்வேறு மீட்புப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது அதில் ஒன்றாக கப்பலில் தீ பிடித்தால் அணைப்பது எப்படி என்ற பயிற்சி நடத்தப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் பீர்பூமில், 'துர்கா பூஜை' திருவிழாவை முன்னிட்டு துர்கை அம்மன் சிலைகளுக்கான ஆபரணங்களைச் செய்யும் பணியில் மூத்த கைவினைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப் படை தளத்தில் நடைபெற்ற 'தரங் சக்தி 2026' பயிற்சியின் போது, இந்திய விமானப் படையின் சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழுவின் போர் விமானங்கள் சாகசங்களைச் செய்து காட்டியது.
விருதுநகர் அருகே பாலவனத்தம் வடக்குப்பட்டி உச்சினி மகா காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்.