புதுடில்லியிலுள்ள சரோஜினி நகரில் அமைந்துள்ளன ஸ்ரீ விநாயகர் கோவிலில், பிரதமர் மோடி, ஆட்சித் தலைவராக 25 ஆண்டுகள் மக்கள் சேவையை நிறைவு செய்ததை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.அவருக்கு கோவில் குருக்கள் திருநீறு பூசி ஆசீர்வாதித்தார்.
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில்,பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கான பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார்.அப்போது அணிவகுப்பு மரபுப்படி அதிகாரியின் வாளை உறையிலிட்டு கௌரவித்தார்.
புது டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் , பிரியங்கா , உள்ளீட்டோர் நேற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தி.நகர் கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், சேவா ஜோதி யாத்திரையை தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று துவக்கி வைத்தார். உடன் பா.ஜ. மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தர்ராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர்.
கே.எம்.சி.எச்., ல் நடந்த தைராய்டு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய கருத்தரங்கை மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி துவக்கி வைத்தார். மருத்துவமனை இணை நிர்வாக இயக்குனர் அருண் பழனிச்சாமி உள்ளிட்டோர்.
மதுரை தேவகி மருத்துவமனையில் இதய ரத்த குழாய்களின் தன்மைகளை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மகோடா கருவியின் அறிமுக விழாவை டாக்டர் தேவகி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து டாக்டர்கள் நாகேந்திரன் , ரூபஸ் , ரீனஸ் , லட்சுமணதாஸ்.