புரட்டாசி திருவிழாவின் முக்கிய திருவிழாவான, அய்யா வைகுண்ட தர்மபதி, 36 உயர அடி திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். இடம்: மணலிபுதுநகர்.
தினமலர் நாளிதழ் சார்பில் பெங்களூரில் முதன்முறையாக நடந்த வித்யாரம்பம் விழாவில் மழலையின் கையை பிடித்து விராலி மஞ்சள் மூலம் அரிச்சுவடி எழுதுவதை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் துவக்கி வைத்தார்.
தசரா, ஆயுத பூஜை காரணமாக, ஊட்டிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தா பகுதியில் பல மணி நேரம் அணி வகுத்து நிற்பதால் உள்ளூர் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போதிய தொலை நோக்கு திட்டங்கள் அவசியமாக உள்ளது.
விழுப்புரத்தில் தினமலர் - பட்டம் இதழ் சரஸ்வதி சென்ட்ரல் சிபிஎஸ்இ பள்ளி வி.பாளையத்தில் இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுடன் வந்தனர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விஜயதசமியை முன்னிட்டு தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு "அ"னா "ஆ"வன்னா எழுத கற்றுத்தரும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நடந்தது.
தாயின் அரவணைப்பை விட சிறந்த பாதுகாப்பு எதுவுமில்லை என்பது போல, குட்டிகளை அணைத்து கூட்டு குடும்ப உன்னதத்தை உணர்த்தும் குரங்கு குடும்பம். இடம்: ஆழியாறு ரோடு.