சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, ஊட்டி அரசு மருத்துவமனையில், தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழக மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.