ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் கோவை விழாவின் ஒரு பகுதியாக விழா வீதி எனும் கலை நிகழ்ச்சி காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் நடந்த கலை நிகழ்ச்சியை கண்டு கழித்து ஏராளமான பொது மக்கள் .
புதுடில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் ஆகியவை இணைந்து, டில்லி ஜன்பத் சாலை சம்வெட் கலை அரங்கில் நடத்திய நிகழ்ச்சியில், விஜய் சிவா கர்நாடக இசை நிகழ்த்தினார். விக்னேஸ்வரன், ஹேமலதா - வயலின், சேர்த்தலை ராதாகிருஷ்ணன் - மிருதங்கம், நெற்குணம் சங்கர் - கஞ்சிரா, நிதேஷ் மற்றும் அமித் - தம்புரா வாசித்தனர்.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 600 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.