திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போத்தி திருமண மண்டபத்தில் நடந்த தினமலரில் பணிபுரியும் மனித வளத்துறை செயல் அலுவலர் சீனிவாசன் மகள் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் இடமிருந்து வலம் மணமகளின் தங்கையை உஷா மணமகளின் தந்தை சீனிவாசன் மணமகளின் தாய் அருணா , மணமகள் புஷ்பா, மணமகன் பரத் குமார், மணமகனின் தாய் முனிராஜ் மணமகனின் தந்தை ரவி, மணமகனின் தம்பி குணசேகர்.
டில்லியில் தடையை மீறி கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் தேசிய கொடியை போர்த்தி தன் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து சென்ற தாய்.
பெரம்பூர் எஸ்பிஆர் சிட்டியில் எஸ்பிஆர் சிட்டி நவராத்திரி உற்சவத்தின் ஒரு பகுதியாக சென்னையின் மிக உயரமான 47 மாடி குடியிருப்பு வளாகத்தை குறிக்கும் வகையில் 47.8 அடி உயர பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டு உள்ளது. உலக சாதனை முயற்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கொலுவை இன்று முதல் அக் 20ம் தேதி வரை மக்கள் கண்டுகளிக்கலாம்.
மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் உள்ள பொதுத் துறையைச் சேர்ந்த, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் நம் கடற்படைக்காக உள்நாட்டில் கட்டப்பட்ட மூன்றாவது தலைமுறை ரோந்து கப்பலான ஷ்ரேயஸ் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சார்பில் பன்மொழி நாடக விழா 2026 பெங்களூரு ஆல்செர்மி குழுவினரின் விலங்குப் பண்ணை என்ற தலைப்பில் கடந்த நாடகம். இடம்.மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்.
எல்லைப் பிள்ளை சாவடி சாரதாம்பாள் கோவிலில் நடக்கும் நவராத்திரி விழாவில் ஸ்ரீ சாரதா கலா மந்திர் இசை நாட்டியப் பள்ளியின் மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது.