கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை வழங்கினார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமாவை வலியுறுத்தி பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் எம்பி ராகுல் ஊர்வலமாக புறப்பட்டார். ஆனால்,வழியிலேயே போலீசாரால் தடைகள் வாயிலாக தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த தடுப்பு வேலிகளை தாண்டுவதற்காக அவர் அடித்த ஸ்டண்டட்கள் தான் இவை. இடம்:புதுடில்லி
டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி இண்டி கூட்டணி தலைவர்கள் பேரணி சென்றனர். சாலையில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தடுத்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் தடுப்புகணை தாண்டி செல்வதற்காக படாதபாடுபட்டு தட்டுத்தடுமாறிஅந்த இரும்பு தடுப்புகள் மீது ஏறி நின்றார்.
குற்றாலம் சீசன் முடிவுக்கு வந்ததை அடுத்து மெயின் அருவியில் ஏற்கனவே நடந்த ஆர்ச் கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கின. இதனால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷ்னர் ரவி தேஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மயிலாப்பூர், கிழக்கு மாடவீதியில் உள்ள பாரதிய வித்யா பவன் சபா சார்பில், அதன் அரங்கில் பன்மொழி நாடக திருவிழா நடந்து வருகிறது. நேற்று நடந்த மலையாளத்தின் ‘சில்லாரா சாமரம்’ எனும் நாடகத்தை நிகழ்த்திய கலைஞர்கள்