ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் , தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் , விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார், உடன் கலெக்டர் லட்சுமி பவ்யா கலந்துக் கொண்டார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் ஐயப்பன் அக்கட்சியிலிருந்து விலகி என்.ஆர்.,காங்.,ல் சேர்ந்தார். அவர் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி கடற்கரை சாலையில்அமைக்கப்பட்ட செல்பி பாயிண்ட் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது . இரவு விநாயகர் புறப்பாடு நடந்தது. பக்தர்கள் சூரத் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.