கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி மிஷன் வீதி மாதா கோவில் எதிரே பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் மின் விளக்கால் மின்னுகின்றன.
தலைநகர் டில்லியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிரான போராட்டங்கள், அரசு தலைமைப் பதவியில் பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பான கொண்டாட்டங்களால், பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 24ல், அக் ஷர்தம் அருகே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.