திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த ஆண்டிற்கான விழா வரும் 11ல் துவங்குகிறது; தங்க அம்பாரி சுமக்கும் யானை அபிமன்யுவுக்கு மைசூரு தலைப்பாகை அணிவித்து விழாக்குழுவினர் வரவேற்பு அளித்தனர்.
இந்தியா –- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று துவங்கும் நிலையில், இந்தியா அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி, பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எம்.செட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவ – மாணவியர் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக்கல்வி துறைக்கு பல ஆயிரம் கோடிகளை தமிழக அரசு கொட்டி கொடுத்தாலும், இந்த மரத்தடி வகுப்பறை கலாசாரத்திற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி என்பதே பெற்றோரின் கேள்வி!