சென்னையில் இயங்கி வரும் சென்னை போட்டோ பினாலே என்ற அமைப்பின் சார்பில் நடந்து வரும் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இந்தப் படம், புகைப்படக் கருவிகள் இல்லாத காலத்தில் பழங்குடியின மக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை ஏஐ தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு சமுதாயப் பந்தலில் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் சுவரோவியங்களுக்கு முன்பு, முவர்ணக் கொடியை ஏந்திய பாரத மாதாவின் வடிவத்திலான துர்கா தேவி சிலைக்குக் கலைஞர்கள் இறுதி வடிவமளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் செய்தி எதிரொலியாக கலெக்டர் அலுவலகத்துக்குள் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நலன் அலுவலகம் செல்லும் இடம் மாற்றுத்திறனாளி வாகனங்கள் செல்லும் வகையில் சரி செய்யப்பட்டுள்ளது.