தினமலர் நாளிதழ் மற்றும் வஜ்ரம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை தினமலர் நாளிதழ் இணை இயக்குனர் லட்சுமிபதி ஆதிமூலம் வழங்கினார் ( இடமிருந்து ) வருமான வரித்துறை கமிஷனர் நந்தகுமார், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, முன்னாள் டி.ஜி.பி., ரவி, வஜ்ரம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய பயிற்றுநர் ஸ்ரீ வட்சன் உள்ளிட்டோர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.