இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ் மற்றும் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து நடத்திய மார்கழி விழாக் கோலம் கோலப்போட்டி, கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் ஸ்ரீ வர்ஷா பிளாட்டினம் அபார்ட்மெண்டில் நடைபெற்றது. இதில் புள்ளி கோலம் மற்றும் ரங்கோலி கோலத்தில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அப்பார்ட்மெண்ட் பொருளாளர் ராமச்சந்திரன் தலைவர் நிறைமதி மற்றும் ஒருங்கிணைப்பாளர் கவிதா.
26-Dec-2024
இன்றைய போட்டோ06-Oct-2026

2/

3/

4/
இன்றைய போட்டோ05-Oct-2026

5/

6/

7/
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எம்.செட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவ – மாணவியர் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக்கல்வி துறைக்கு பல ஆயிரம் கோடிகளை தமிழக அரசு கொட்டி கொடுத்தாலும், இந்த மரத்தடி வகுப்பறை கலாசாரத்திற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி என்பதே பெற்றோரின் கேள்வி!
05-Oct-2026

8/

9/

10/
இந்தோனேசியாவின் போர்னியோ மற்றும் சுமத்ரா காடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலால் கடத்தி வரப்பட்டு, அதிகாரிகளுக்குப் பயந்து ஒடிசா மாநிலம் பாலசோர் வனப்பகுதியில் கைவிடப்பட்டன.கடந்த மாதம் வனத்துறையினரால் மீட்கப்பட்ட இந்த இளம் குட்டிகள், தாயின் அன்போடும் அரவணைப்போடும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்ததால் தற்போது மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளன. அதில் இரண்டு குட்டிகள் நேற்று கம்பளத்திலும் ஹாயாகப் படுத்திருந்தன.
05-Oct-2026

