இன்றைய போட்டோ

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரைபகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கோவில் முன்புள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு 10 அடி ஆழத்திற்கு கடலில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் புனித நீராட முடியாமல் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.கோவில் நிர்வாகம் மாற்று ஏற்பாடுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
03-Jan-2025
இன்றைய போட்டோ06-Oct-2026

2/

3/

4/

5/
கேரளாவின் சுற்றுலாத் தலங்களை மற்ற மாநில மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, கேரளா சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு மாநிலங்களில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற கலை விழாவில் கேரளாவின் பாரம்பரியக் கலை வடிவமான 'மயில் நடனம் நடைபெற்றது.
06-Oct-2026

6/
1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று இந்திய விமானப்படை தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 அன்று இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த வீரர்கள்
06-Oct-2026

7/

8/

9/
புதுடில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் ஆகியவை இணைந்து, டில்லி ஜன்பத் சாலை சம்வெட் கலை அரங்கில் நடத்திய நிகழ்ச்சியில், விஜய் சிவா கர்நாடக இசை நிகழ்த்தினார். விக்னேஸ்வரன், ஹேமலதா - வயலின், சேர்த்தலை ராதாகிருஷ்ணன் - மிருதங்கம், நெற்குணம் சங்கர் - கஞ்சிரா, நிதேஷ் மற்றும் அமித் - தம்புரா வாசித்தனர்.
06-Oct-2026
10/

