சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் உணவகங்களுக்கு வருபவர்கள் சாலையிலே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று இந்திய விமானப்படை தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 அன்று இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த வீரர்கள்
புதுடில்லி, லஜ்பத் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘பஞ்சாப் பாரம்பரிய இல்லம்’ கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சாந்துவுடன், பா.ஜ., - எம்.பி., பான்சுரி ஸ்வராஜ் மற்றும் சர்வதேச பஞ்சாபியர் சங்க நிர்வாகிகள்.
புதுடில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் ஆகியவை இணைந்து, டில்லி ஜன்பத் சாலை சம்வெட் கலை அரங்கில் நடத்திய நிகழ்ச்சியில், விஜய் சிவா கர்நாடக இசை நிகழ்த்தினார். விக்னேஸ்வரன், ஹேமலதா - வயலின், சேர்த்தலை ராதாகிருஷ்ணன் - மிருதங்கம், நெற்குணம் சங்கர் - கஞ்சிரா, நிதேஷ் மற்றும் அமித் - தம்புரா வாசித்தனர்.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 600 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.