மாநில அளவிலான நீதிபதிகளுக்கான கிரிக்கெட் போட்டி கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் கர்நாடகா அணியும் கேரளா அணியும் விளையாடினர்.
தேர்தல் முடிந்து விடபோகிறது சீக்கிரமா தள்ளு... தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் கூட வந்த போலீசார் வாகனத்தின் அவலம்.
ராஜ்புவன் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் ராமலிங்கம் மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, தமிழக துணைத் தலைவர் குஷ்பு தலைமையில் மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார்.
சாலையோர நடைபாதை வியாபாரிகள் நிழலுக்காக பயன்படுத்தும் குடையில் அரசியல் கட்சி விளம்பரங்கள் மறைக்கப்படாமல் உள்ளது. இடம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம்.