பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறினார்கள்.இடம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
அலையன்ஸ் பிரான்சைஸ் ஆப் மெட்ராஸ் வளாகத்தில் திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணியின் ஓவிய கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு ரசிக்கலாம். இடம்: நுங்கம்பாக்கம்.
அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சார்பில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்ட அப்பல்லோ ஆயுர்வேத மருத்துவமனையை அக்குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி திறந்து வைத்தார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, உள் பிரகாரத்தில் உற்சவர் சந்திரசேகர், சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.