மதுரை வைகை தென்கரை பகுதியில் கட்டடங்கள் அகற்றும் பணியால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து வடகரை சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: ஆழ்வார்புரம்.
நவராத்திரி பூஜை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதையொட்டி நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒத்திகையில் ஈடுபட்ட பெண் நடனக் கலைஞர்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்.
ஜப்பானில் 16 நாட்களாக நடந்த ஆசிய விளையாட்டு போட்டி நேற்று நிறைவு பெற்றது. விழா அணிவகுப்பில் மூவர்ணக்கொடி ஏந்தி வந்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா.
தாராபுரம், வீரமாச்சிமங்கலம் பிரிவில் முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக அகற்றினர்.
மழையை காணோம்... குளங்களெல்லாம் வற்றி வருகிறதே என கலங்கிப் போயிருக்கும் இன்றைய நிலையில் சற்றே ஆறுதல் அளிக்கிறது இந்த தடுப்பறை. இடம்: கோவை, பெருமாள்கோவில்பதி