மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவக்க விழாவில் ஜெட் சூட் வீரர் வான் வழியாக பறந்து கோப்பையை அறிமுகப்படுத்தினார். தொழில்நுட்பமும் விளையாட்டு உணர்வும் இணைந்த இந்த நிகழ்வு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடும் குளிர் நிலவுகிறது. அங்குள்ள தால் ஏரியில் படகில் செல்லும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் ஓயாமல் உழைத்த படகுகள் ஓய்வெடுக்கின்றன.
மாநில அரசு மூலம் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில், வாழை மட்டையில் இருந்து தயார் செய்த பொருட்களுடன், அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமத்தை சேர்ந்த பெண்கள்
விருத்தாசலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2000 மெட்ரிக் டன் நெல்முட்டைகள் விருத்தாசலம் ரயிலில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.