புதுச்சேரி ஜிப்மர் அப்துல் கலாம் ஆடிட்டோரியத்தில் நடந்த தினமலர் நாளிதழ் பட்டம் இதழின் வினாடி வினா விருது வழங்கும் விழாவை கவர்னர் கைலாஷ் நாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் புதுச்சேரி தினமலர் பதிப்பாளர் மற்றும் வெளியிட்டாளர், கே. வெங்கட்ராமன் நீதிபதி ராமசுப்பிரமணியன் ஆச்சார்யா கல்விக் குழுமத் தலைவர் அரவிந்தன்.
கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த ஆண்டிற்கான விழா வரும் 11ல் துவங்குகிறது; தங்க அம்பாரி சுமக்கும் யானை அபிமன்யுவுக்கு மைசூரு தலைப்பாகை அணிவித்து விழாக்குழுவினர் வரவேற்பு அளித்தனர்.
இந்தியா –- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று துவங்கும் நிலையில், இந்தியா அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி, பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எம்.செட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவ – மாணவியர் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக்கல்வி துறைக்கு பல ஆயிரம் கோடிகளை தமிழக அரசு கொட்டி கொடுத்தாலும், இந்த மரத்தடி வகுப்பறை கலாசாரத்திற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி என்பதே பெற்றோரின் கேள்வி!