திருநெல்வேலிக்கு வரும் 6,7 ஆகிய தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் வருவதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில் கே.டி.சி., நகர் மேம்பால சுவரில் வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு ஓவியங்களுக்கு மேல் தி.மு.க.,வினர் தங்களது கட்சி விளம்பரங்களை வரைந்துள்ளனர்.
கோவை கொடிசியா சார்பில் நடக்கும் ராமேட் 2026 கண்காட்சியை கோவை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் தினேஷ் பி பங்கர்கர் துவக்கி வைத்தார். உடன் கொடிசியா தலைவர் ரங்கசாமி, ராமேட் 2026 சேர்மன் ஸ்ரீதர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தக்காளிகள் முழு வளர்ச்சி அடையும் முன்பே நோய்வாய்ப்பட்டு சிறிய பழங்களாக உள்ளன. அதை வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தக்காளிகள் முழு வளர்ச்சி அடையும் முன்பே நோய்வாய்ப்பட்டு சிறிய பழங்களாக உள்ளன. அதை வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டனர்.
விருத்தாசலம் காய்கறி மார்க்கெட் கடைகளை பழைய வியாபாரிகளுக்கு வழங்க கோரி மின்னணு ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஏலத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம், திருப்பூர் எல். ஆர்.ஜி அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. மழையால் சேறும் சகதியாக மாறிய வளாகம் மண் கொட்டப்பட்டு சமப்படுத்தும் பணி நடந்தது.