சிவகங்கை அருகே சாமியார் பட்டி கிராமத்தில் வைத்துள்ள சமுதாயப் போர்டுகளை அகற்றிய இளைஞர்களை போலீசாரும் அதிகாரிகளும் கிராம இளைஞர்களை பாராட்டி பொன்னாடை போத்தினர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகர் ரோமில், 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
சிதம்பரம் தில்லை கோவிந்த ராஜ பெருமாள் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மூலவர் சன்னிதி கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்ற பக்தர்கள் கோவிந்தா நாமம் முழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம், கொப்பூர் ஊராட்சியில் உள்ள கிளை நூலகம், மதுக்கூடமாக மாறியது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிளை நூலகம் சீரமைக்கப்பட்டு உள்ளது.
உலக கல்விக்கழகங்கள் கூட்டமைப்பின் 8ம் ஆண்டு மாநாடு டில்லியில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, வேலூர் விஐடி பல்கலை வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, 'வாழ் நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவித்தார்.
அலையன்ஸ் பிரான்சைஸ் ஆப் மெட்ராஸ் வளாகத்தில் திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணியின் ஓவிய கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு ரசிக்கலாம். இடம்: நுங்கம்பாக்கம்.
அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சார்பில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்ட அப்பல்லோ ஆயுர்வேத மருத்துவமனையை அக்குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி திறந்து வைத்தார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, உள் பிரகாரத்தில் உற்சவர் சந்திரசேகர், சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.