திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக, திருப்பூர் தாராபுரம் ரோடு ஹிந்து முன்னணி அலுவலகம் முன் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்ததை கண்டித்து ரோடு மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள லேண்டிங் பிரிட்ஜஸ் பகுதியில் ஆற்றில் மிதந்து வரும் ராட்சத பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கியுள்ள உல்லாச கப்பல்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, விரதம் இருந்த பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
அன்னூர் சாலையில் நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு சம்பந்தமான பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.