சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் அருண் காவலர்களுக்கு பத பதக்கங்களையும், சான்றிதழ் வழங்கினார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மூத்த பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். மூத்த பத்திரிகையாளர் நூருல்லா ஆணையை பெற்றார். இடமிருந்து துறை செயலர் ராஜராமன், இயக்குநர் அருண் தம்புராஜ். இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை.
ஒடிசா மாநிலம் பரதீப் கடற்கரைப் பகுதியில், இந்தியக் கடலோரக் காவல்படையின் சார்பில் நேற்று பல்வேறு மீட்புப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது அதில் ஒன்றாக கப்பலில் தீ பிடித்தால் அணைப்பது எப்படி என்ற பயிற்சி நடத்தப்பட்டது.