திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, கட்சி ஏஜன்டுகளுக்கான பயிற்சி கூட்டம், டவுன்ஹால் மாநாட்டு அரங்கில் நடந்தது.
கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து, செஞ்சிலுவை சங்கம் அருகே பா.ஜ., கட்சி சார்பில் தீ பந்தம் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.