புதுச்சேரி தவளகுப்பத்தில் சிறுமியை பாலியல் கொடுமை செய்த ஆசிரியரை கண்டித்து 18 கிராம மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ஓய்வெடுக்கும் படகுகள்.
திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடந்த மகளிர்க்கு இலவச வெற்றி பயணம் திட்டத்தினை வழித்தடம் 97 திருத்தணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பயணம் செய்தார்
பா.ம.க.வின் பசுமை தாயகம் அமைப்பின் 'மது இல்லா தமிழகம்' எனும் விழிப்புணர்வு இயக்கத்தை, பா.ம.க., சட்டசபை குழு தலைவர் சவுமியா தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.
நெரிசல்:காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பவும் பொதுமக்களால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம் :பெருங்களத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.