திருவள்ளூர் அடுத்த சதுரங்க பேட்டையில் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் அருகில் சுற்றுலாத் துறை சார்பில் உணவு விடுதி கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கிறது அதற்காக பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமின் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணியருக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்; டி 20 கிரிக்கெட்டில் தங்கம் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்திய அணியினர். இடம்: ஜப்பான்.
தேசிய வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடந்த வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விலங்குகள் போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியர்.
இயற்கையின் பேரழகை சுமந்து நிற்கும் சுற்றுலா தலமான கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மூணாறில் நிகழும் சூரிய உதய காட்சி காண்போரை பரவசப்படுத்தும்; இது நேற்று அதிகாலை நிகழ்ந்த சூரிய உதயம். இடம்: பெரியகானல்.
மேட்டூர் அணை நீர்மட்டம், 74 (முழு கொள்ளவு 120 அடி)அடியாக குறைந்ததால், சேத்துக்குழி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியிருந்த, புனித சவேரியார் ஆலய கோபுர முகப்பு, 6 அடி அளவில், நீருக்கு வெளியே தெரிந்தது
அசாம் மாநிலம் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.