சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிட இடமின்றி வெயிலில் அமர்ந்து உணவு அருந்தினர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேசிகர் உற்சவ விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்திற்கு முன்பாக மின்னொளியில் ஜொலித்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.
தினமலர் நாளிதழ் சார்பில் பெங்களூரில் முதன்முறையாக நடந்த வித்யாரம்பம் விழாவில் மழலையின் கையை பிடித்து விராலி மஞ்சள் மூலம் அரிச்சுவடி எழுதுவதை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் துவக்கி வைத்தார்.
தசரா, ஆயுத பூஜை காரணமாக, ஊட்டிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தா பகுதியில் பல மணி நேரம் அணி வகுத்து நிற்பதால் உள்ளூர் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போதிய தொலை நோக்கு திட்டங்கள் அவசியமாக உள்ளது.