சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோடு உள்ள காமாட்சி அம்மன் கோவில 21-ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழாவில் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டூர் அணை நீர்மட்டம், 74 (முழு கொள்ளவு 120 அடி)அடியாக குறைந்ததால், சேத்துக்குழி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியிருந்த, புனித சவேரியார் ஆலய கோபுர முகப்பு, 6 அடி அளவில், நீருக்கு வெளியே தெரிந்தது
அசாம் மாநிலம் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,செயலாளர் டாக்டர் லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் டி.கே.பி.ரமேஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.