சென்னையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் உடலில் வெப்பத்தை தணித்து நீர்ச்சத்தை அதிகரிக்கும் விதமாக விற்பனைக்கு வந்துள்ள தர்பூசணி பழங்கள்.இடம் : நுங்கம்பாக்கம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.