தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் கோவை கொடிசியா அரங்கில் மாணவ , மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது.கருத்தரங்கினை (இடமிருந்து) கற்பகம் கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட் ரிலேஷன் இயக்குனர் பானு, டாக்டர் என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மதுரா பழனிச்சாமி, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், அமிர்தா விஷ்வ பீடம் பேராசிரியர் ரமேஷ்குமார், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி செயலாளர் யசோதாதேவி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நவராத்திரி பூஜை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதையொட்டி நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒத்திகையில் ஈடுபட்ட பெண் நடனக் கலைஞர்கள். இடம்: ஆமதாபாத், குஜராத்.
ஜப்பானில் 16 நாட்களாக நடந்த ஆசிய விளையாட்டு போட்டி நேற்று நிறைவு பெற்றது. விழா அணிவகுப்பில் மூவர்ணக்கொடி ஏந்தி வந்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா.
தாராபுரம், வீரமாச்சிமங்கலம் பிரிவில் முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக அகற்றினர்.
மழையை காணோம்... குளங்களெல்லாம் வற்றி வருகிறதே என கலங்கிப் போயிருக்கும் இன்றைய நிலையில் சற்றே ஆறுதல் அளிக்கிறது இந்த தடுப்பறை. இடம்: கோவை, பெருமாள்கோவில்பதி