புதுச்சேரி சட்டசபை நிகழ்வு முடிந்த நிலையில் அவையை விட்டு வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் கமாண்டோ படைக்கு நன்றி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.