பாலைவனத்தில் மரங்களை பார்க்க முடியாது என்பதால் தற்போதே இலைகளை தின்று தன் பசியை போக்கிக் கொள்கிறதோ இந்த ஒட்டகம்!. தென்காசி மாவட்டம் கல்லூரணி பகுதியில் சர்க்கஸ் போடுவதற்காக அழைத்து வரப்பட்ட ஒட்டகம் புளிய மரத்தின் இலைகளைக் தின்று பசியை போக்கிகொள்கின்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, வீதி உலா வரும் விநாயகர் தேரை தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், நடந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகை உடன் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.