புதுச்சேரி -திண்டிவனம் மெயின் ரோடு இரும்பையில் உள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து, நடந்த பொதுக்கூட்டத்தில் ஓட்டு சேகரித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின். அருகில் வேட்பாளர் சுகன்யா. இடம்: உடுமலை ரோடு.
திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடந்த மகளிர்க்கு இலவச வெற்றி பயணம் திட்டத்தினை வழித்தடம் 97 திருத்தணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பயணம் செய்தார்
பா.ம.க.வின் பசுமை தாயகம் அமைப்பின் 'மது இல்லா தமிழகம்' எனும் விழிப்புணர்வு இயக்கத்தை, பா.ம.க., சட்டசபை குழு தலைவர் சவுமியா தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.
நெரிசல்:காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பவும் பொதுமக்களால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம் :பெருங்களத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.