திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைகள் தலக்காஞ்சேரி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. குப்பைகள் எரிப்பதால் அப்பகுதி வாசிகள் சிரமப்படுகின்றனர்.
தெற்கு தொகுதி வேட்புமனு பரிசீலனை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அதற்காக வந்த வேட்பாளர் மற்றும் ஏஜன்ட்டுகளை போலீசார் சோதனை செய்த பின்பே அனுமதித்தனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பொதுத் தேர்தலையொட்டி நூறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் கொடியசைத்து துவக்கி வைத்தார்
புழுதி பறக்கும் பாரு.! தேர்தல் திருவிழா என்றாலே பட்டாசு இல்லாமல் ஒன்றும் நடக்காது. நம்ம அரசியல்வாதிகளுக்கு. ஓட்டு கேட்டு வேட்பாளர் தொகுதிக்குள் நுழைந்து விட்டால், அனல் பறக்கும் பட்டாசுகளை ரோட்டில் பற்ற வைத்து பரபரப்பை கூட்டி விடுகின்றனர். இடம்: கவுண்டம்பாளையம், கோவை