சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரியை கிரேன் வாயிலாக அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.
சென்னையில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இடம் : பெசன்ட் நகர்