திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே மதவ குறிச்சி கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக அரசு ஊதியம் தரவில்லை. இருப்பினும் சாலையோரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு ,தண்ணீர்...தண்ணீர்...சினிமா பாணியில் எங்கிருந்தோ குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ,தமது சொந்த கிராமம், சொந்த மரங்கள் என அக்கறையோடு பணியாற்றும் பெண்கள் ....
நெரிசல்:காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பவும் பொதுமக்களால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம் :பெருங்களத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காரியமங்கலம் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தின் கீழ் புதிய சமுதாய குளம் அமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.
திருப்பூரில், பி. எஸ். என் எல் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படி மாதம் 1000 ரூபாய் திரும்ப வழங்க கோரி, ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் உள்ள அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.