அடையாரில் இருந்து மத்திய கைலாஷ் வழியாக சர்தார் பட்டேல் சாலையில் வரும் வாகனங்கள் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்இடம் : கிண்டி
வடகிழக்கு மாநிலமான அசாமின் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணியருக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்; டி 20 கிரிக்கெட்டில் தங்கம் கைப்பற்றிய உற்சாகத்தில் இந்திய அணியினர். இடம்: ஜப்பான்.
தேசிய வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நடந்த வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விலங்குகள் போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவியர்.
இயற்கையின் பேரழகை சுமந்து நிற்கும் சுற்றுலா தலமான கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மூணாறில் நிகழும் சூரிய உதய காட்சி காண்போரை பரவசப்படுத்தும்; இது நேற்று அதிகாலை நிகழ்ந்த சூரிய உதயம். இடம்: பெரியகானல்.
மேட்டூர் அணை நீர்மட்டம், 74 (முழு கொள்ளவு 120 அடி)அடியாக குறைந்ததால், சேத்துக்குழி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியிருந்த, புனித சவேரியார் ஆலய கோபுர முகப்பு, 6 அடி அளவில், நீருக்கு வெளியே தெரிந்தது
அசாம் மாநிலம் கோலாகாட்டில் உள்ள காசிரங்கா புலிகள் காப்பகம் பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் பின் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது.