மெட்ரோ ரயில் பயணிகள் அதிகமாக வந்து செல்வதால் நுழைவாயிலில் உள்ள தானியங்கி கேட்டுகளை திறந்தே வைத்திருப்பதற்கான சோதனை ஓட்டம் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்தது.
கிறிஸ்துவர்கள் தங்கள் முன்னோரை நினைவு கூரும் வகையிலான கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், தங்கள் முன்னோர் மற்றும் உறவினர்களின் கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய கிறிஸ்துவர்கள்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நடப்பாண்டுக்கான பிரமாண்ட சைக்கிள் நடந்தது. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த போட்டியில் 40,327 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.