பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு, கோவை ஆர்.எஸ். புரம். , லைட் ஹவுஸ் பகுதியில் சிவ சேனா கட்சி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே எம்.செட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவ – மாணவியர் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. பள்ளிக்கல்வி துறைக்கு பல ஆயிரம் கோடிகளை தமிழக அரசு கொட்டி கொடுத்தாலும், இந்த மரத்தடி வகுப்பறை கலாசாரத்திற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி என்பதே பெற்றோரின் கேள்வி!
இந்தோனேசியாவின் போர்னியோ மற்றும் சுமத்ரா காடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ஐந்து ஒராங்குட்டான் குட்டிகள், சர்வதேச வனவிலங்கு கடத்தல் கும்பலால் கடத்தி வரப்பட்டு, அதிகாரிகளுக்குப் பயந்து ஒடிசா மாநிலம் பாலசோர் வனப்பகுதியில் கைவிடப்பட்டன.கடந்த மாதம் வனத்துறையினரால் மீட்கப்பட்ட இந்த இளம் குட்டிகள், தாயின் அன்போடும் அரவணைப்போடும் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்ததால் தற்போது மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளன. அதில் இரண்டு குட்டிகள் நேற்று கம்பளத்திலும் ஹாயாகப் படுத்திருந்தன.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராமிய கலைஞர்களின் வாழ்வாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு கொடுக்க வந்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு. இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்.போலீசாருக்கும் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.