தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனைகள்யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, வீதி உலா வரும் விநாயகர் தேரை தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், நடந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகை உடன் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.