காளையார் கோவில் அருகே நல்லேந்தல் தர்ம முனீஸ்வரன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடி வாசலிருந்து பாயும் புலி போல் வந்த காளை.
புதுடில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் ஆகியவை இணைந்து, டில்லி ஜன்பத் சாலை சம்வெட் கலை அரங்கில் நடத்திய நிகழ்ச்சியில், விஜய் சிவா கர்நாடக இசை நிகழ்த்தினார். விக்னேஸ்வரன், ஹேமலதா - வயலின், சேர்த்தலை ராதாகிருஷ்ணன் - மிருதங்கம், நெற்குணம் சங்கர் - கஞ்சிரா, நிதேஷ் மற்றும் அமித் - தம்புரா வாசித்தனர்.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 600 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.