ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பேரணியாக நடந்து சென்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் புதிய சத்திரம் திறப்பு விழா நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், சத்திரத்தை திறந்து வைத்தார். உடன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள 'சொத்பீஸ்' என்ற உலக புகழ்பெற்ற ஏல நிறுவனத்துக்காக, இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் மவுரிசியோ கத்தேலன், தங்கத்தால் ஆன கழிப்பறையை உருவாக்கி உள்ளார். இதன் மதிப்பு 90 கோடி ரூபாய்.
தக்காளி விலை கடுமையாக சரிந்தாலும், மழையால் பாதிக்கப்பட்டதாலும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த தக்காளியை டிராக்டரில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டினர். இடம்: சிக்கமகளூரு, கர்நாடகா.
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1,040வது சதய விழாவை யொட்டி, பெரிய கோவில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பரதநாட்டியமாடி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க புதிய கட்டடத்தை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக அமைச்சர் ரகுபதி.