திருச்செந்தூர் முருகன் கோயிலில் பச்சிளம் குழந்தைக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அருகில் ஹிந்து அறநிலைய துறை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் பழநி . திருச்செந்தூர் திருக்கோயில் தக்கார் அருள்முருகன்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு நாட்கள் நடக்கும் விமான கண்காட்சியின் முதல் நாளில் நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வேஸ்ட் டு வொண்டர் ப்ளவர் கார்டன் என்ற சூழலியல் பூங்காவிற்கு வருகை தந்த பள்ளி மாணவர் ஒருவர் பூந்தொட்டியாக மாற்றப்பட்டுள்ள பழங்கால காரின் அழகை ரசித்தார்.